மந்திகை வைத்தியசாலை அம்புயூலன்ஸ் விபத்து!

பருத்தித்துறை, மந்திகை ஆதார வைத்தியசாலையின் நவீன ரக அம்புயூலன்ஸ் ஒன்று இன்று (06) அதிகாலை குஞ்சர் கடைப் பகுதியில் விபத்துக்குள்ளாகி சேதமடைந்துள்ளது.

மந்திகை ஆதார வைத்தியசாலையில் இருந்து அவசர நோயாளி ஒருவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்துவிட்டு மீண்டும் மந்திகை நோக்கிப் பயணித்த போது, சில்லு ஒன்றின் காற்று வெளியேறிய நிலையில் அம்புயூலன்ஸ் விபத்துக்குள்ளாகியது என்று பொலிஸார் தெரிவித்தனர்.