விபத்தில் பொலிஸ் பொறுப்பதிகாரி காயம்!

கிளிநொச்சி – கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்று (05) இரவு வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் காரின் சாரதி காயமடைந்துள்ளார்.

கிளிநொச்சி ஏ-9 வீதியின் கிளிநொச்சி நகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியோரத்தில்; நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின்போது காரின் சாரதி காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு காரை செலுத்திச் சென்ற நபர் பளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எனவும், அவர் மது போதையில் இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.