பிறந்த குழந்தைக்கு கொரோனா: மருத்துவமனையில் விட்டு தப்பியோடிய பெற்றோர்!

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் அரசு மருத்துவமனைக்கு பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையை அதன் பெற்றோர் சிகிச்சைக்கு அழைத்து வந்திருந்தனர்.

பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் ”NECROTIZING EMTEROCOLITIS” என்ற நோயால் அந்த குழந்தை பாதிக்கப்பட்டிருந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே குழந்தையை காப்பாற்ற முடியும் என கூறிய வைத்தியர்கள், கடந்த மாதம் 29 ஆம் தேதி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அந்த குழந்தையின் பெற்றோரிடம், மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அப்போது முதல், அந்த குழந்தையின் அப்பாவையும், அம்மாவையும் காணவில்லை எனவும், கொரோனா பரிசோதனை முடிவு வருவதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை , மருத்துவமனையில் தான் அவர்கள் இருந்தார்கள். பரிசோதனை முடிவை சொன்னதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகின்றது.