கட்டுப்பாடற்ற வேகத்தில் வந்த டிப்பர் சைக்கிளில் சென்றவரை மோதிக் கொன்றது

சைக்கிளில் சென்றவர் மீது பின்னால் வந்த டிப்பர் மோதியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றார். 

இந்த சம்பவம் மட்டக்களப்பு – ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது.  இந்த விபத்தில் கொம்மாதுறை – கலைவாணி வீதியை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை கவேந்திரன் (வயது46) என்பர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் பங்குகொண்டு விட்டு துவிச்சக்கரவண்டியில் பிரதான வீதியூடாக வீடு திரும்பும்போது பின்னால் வேகமாக வந்த டிப்பர் குறித்த நபர் மீது மோதியுள்ளது. 

பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மஹியங்கனையை சேர்ந்த டிப்பர் வண்டியின் சாரதி ஏறாவூர்ப் பொலிஸார் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.