கஞ்சா கலந்த போதை மாத்திரை வைத்திருந்தவர் கைது

மதவாச்சி – மஹகும்புக்கொல்லேவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சனிக்கிழமை முன்னெடுத்திருந்த சோதனை நடவடிக்கைகளின் போது கஞ்சா கலந்த ஒருவகையான போதை மாத்திரைகளை வைத்திருந்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து 2 கிலோ 215 மில்லிகிராம் கஞ்சா கலந்த ஒரு வகையான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

வவுனியாவை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.