
காலி – கொழும்பு பிரதான வீதியின் வாத்துவ பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையின் செவிலியர்களை ஏற்றிச்சென்ற வட மாகாண அமைச்சுக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக குறிப்பிடப்படுகிறது.
எவ்வாறாயினும் குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.