பேருந்துகளின் விபத்தால் துண்டாடப்பட்ட இளைஞனின் கை: பொருத்தும் நடவடிக்கையில் வைத்தியர்கள்

பேருந்து விபத்தில் இளைஞன் ஒருவரின் கை துண்டாடப்பட்ட நிலையில் அதனை பொருத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக இரத்திரபுரி அரச வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவு வைத்தியர்கள் கூறியிருக்கின்றார்கள். 

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து தனியார் பெருந்துடன் மோதி நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது. இதன்போது தனியார் பேருந்தில் பயணித்த இளைஞன் ஜன்னலில் கையை வைத்திருந்த நிலையில் விபத்தின்போது கை துாண்டாடப்பட்டது.

கையை இழந்த கொடக்கவெல பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான இளைஞன் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவருடைய துண்டாடப்பட்ட கையும் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் அவருடைய கையை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த விபத்து சம்பவத்தையடுத்து கஹவத்தைப் பொலிசார் இ.போ.ச. பஸ் வண்டியின் சாரதியை கைது செய்துள்ளனர்.