
ஹட்டன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தேயிலை தோட்டத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
அதிக விலையில் மதுபானங்கள் விற்கப்படுவதாக ஹட்டன் காவற்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கமைவாக இந்த கைது இடம்பெற்றுள்ளது.
அதேநேரம், கண்டி – பல்லேகலையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 25 சட்ட விரோத மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் நுவரெலிய – ராகமை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுற்றிவளைப்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் குறிப்பிட்டனர்.
இதேநேரம், சியம்பலான்டுவை பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுப்பட்ட 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.