குளியாப்பட்டிய சிறையில் இருந்து நால்வர் தப்பியோட்டம்!

களுத்துறை – குளியாப்பிட்டிய சிறைக் கூடத்திலிருந்து 4 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே இவ்வாறு தப்பியோடியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

நேற்று (04) இரவு சிறைக்கூடத்தின் கூரையிலிருந்த ஓடுகளைக் கழற்றி அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக நிர்வாக ஆணையாளர் கூறினார்.

இவர்களில் ஒருவர் சரணடைந்துள்ளார்.