கோத்தபாயவின் நடவடிக்கைக்கு எதிராக யுனேஸ்கோவிற்கு கடிதம் அனுப்பிய மங்கள

சிங்கராஜவனத்திற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பில் சுட்டிக்காட்டி, அதனைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பிற்கு (யுனெஸ்கோ) கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறார்.

யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அஸோலேவிற்கு அவர் அனுப்பிவைத்திருக்கும் கடிதத்தில், 1988 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் உலக மரபுரிமையாக அங்கீகரிக்கப்பட்ட சிங்கராஜவனம் தற்போது அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.