
இதுவரை இலங்கையில் கடந்த காலங்களில் கொண்டாடப்பட்ட தமிழ் சிங்கள புதுவருட நிகழ்வுகளில் இடம்பெற்ற விபத்துக்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை பாரிய வித்தியாசத்தை காணமுடிவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
இதற்கமைய தமிழ் சிங்கள புதுவருட தினத்தில் 87 விபத்துக்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 06 நெடுஞ்சாலை விபத்துக்களும், 20 வீடுகளில் இடம்பெற்ற சம்பவங்களும், 11 நபர்களுக்கிடையிலான மோதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பட்டாசு விபத்து அல்லது தீ விபத்து தொடர்பில் எந்தவித சம்பவங்களும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.