சென்னையில் மேலும் 992 பேருக்கு கொரோனா

​சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 39-ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 992 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,39,720 -ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனாவில் இருந்து 1,24,891 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பால் 2,826 பேர் உயிரிழந்துள்ளனர். 12,003 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.