6000 பசுக்களுடன் காணாமல் போன கப்பல்!

43 ஊழியர்கள், 6000 கறவைப் பசுக்களுடன் ஜப்பான் கடற்பிராந்தியத்தில் சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியுள்ளது. குறித்த கப்பலில் இருந்த ஒருவர் ஜப்பான் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

மேசக் சூறாவளி காரணமாக கல்ப லைவ்ஸ்ரொக்1 (Gulf Livestock1) எனும் கப்பல் காணாமற்போயுள்ளது. குறித்த கப்பல் மூழ்குவதாக கிழக்கு சீனக் கடலிலிருந்து சமிக்ஞை அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கப்பலைத் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படியே ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.