
பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேரில் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக தொற்றுக்குள்ளானோர் 231 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய பரிசோதனையில் இரு இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுதடுத்தி வைக்கப்பட்டிருந்த 8 பேரில் 4 வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இன்று 24 பேருக்கான கொரோனா தொற்றுக்கான ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
14 பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள்.
ஒருவர் இவர்களுக்கு உணவு வழங்கியவர்.
ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்.
8 பேர் முழங்காவில் பகுதி கடற்படை முகாமில் நாட்டின் வேறு பகுதியை சேர்ந்த வர்கள். தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.