2,230 கிலோ மஞ்சள் தூள் கைப்பற்றல்!

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட உலர்ந்த 2,230 கிலோ மஞ்சள் தூள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

களுத்துறை – பேருவெல கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் இருந்தே குறித்த மஞ்சள் தூள் மீட்கப்பட்டது.