அம்பாறை கடற்பகுதியில் கப்பலில் வெடிப்பு; 19 பேர் படுகாயம்!

அம்பாறை – சங்கமன் கந்த கடற்பகுதியில் இருந்து 38 கடல் மைல் தூரத்தில் பனாமா கொடியை தாங்கிய புதிய டியமன்ட் என்று அழைக்கப்படும் கப்பல் ஒன்றில் எரிபொருள் குதத்தில் ஏற்பட்ட வெடி விபத்தால் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் இதுவரை 19 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் விமானப்படையினர் இணைந்து மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி கப்பலின் கப்டன் உட்பட இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.