கொக்குவில் கிழக்கில் ஹெரோயின் நுகர்ந்த ஐவர் கைது!

யாழ்ப்பாணம் – கொக்குவில் கிழக்கு பகுதியில் ஹெரோயினை நுகர்ந்து கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஐந்து சந்தேகநபர்கள் நேற்று (02) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் இளைஞர்கள் கூடி நிற்பதாக கோப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் 5 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்படவர்களிடம் இருந்து 210 மில்லிக் கிராம் கொரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.