பெக்கோ கவிழ்ந்து ஒருவர் பலி; இருவர் படுகாயம்!

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹந்தான, தபோதாரகம வீதியில் பெக்கோ இயந்திரம் ஒன்று கவிழ்ந்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (02) பிற்பகல் குறித்த வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பெக்கோ இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பின்நோக்கி சென்று கவிழ்ந்துள்ளது.

இதன்போது பெக்போவில் பயணித்த மூவர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.