38 கிலோ கஞ்சா கடத்தல்; நால்வர் கைது!

38 கிலோ கஞ்சாவுடன் கப் ரக வாகனம் ஒன்றில் பயணித்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த நபர்களிடம் இருந்து ஒரு மில்லியன் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.