மூன்று மாணவிகள் துஷ்பிரயோகம்; காவலாளி கைது!

குருநாகல் – நிகவெரட்டிய பகுதியில் ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவிகள் மூவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாடசாலை காவலாளி ஒருவரை கைது செய்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரால் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவருக்கு கடிதம் ஒன்றின் ஊடாக அறிவித்ததையடுத்து, அதிகாரசபையின் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்தி விசாரணைகளையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 39 வயதுடையவர் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் சிறுமிகளின் பெற்றோர் ஆகியோரிடம் விசேட பொலிஸ் விசாரணைப்பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.