23 கிலோ ஹெரோயின் மீட்பு; கான்ஸ்டபிளுக்கு வலை வீச்சு!

கம்பஹா – சப்புகஸ்கந்த, ஹெய்யன்துட்டுவ பகுதியில் சுற்றிவளைப்பின் போது 23 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

தளபாட வேலைத்தளம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களைத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தியபோது கிடைத்த தகவலுக்கு அமைய இன்று சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் ஊடாக இந்த ஹெரோயின் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த கான்ஸ்டபிள் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர். அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மீகஹவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.