நுழைவாயில் கோபுரம் திறந்து வைப்பு!

வவுனியா – செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவின் துட்டுவாகை கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கானதும் கிராமத்திற்கானதுமான நுழைவாயிற் கோபுரம் இன்று (02) திறந்து வைக்கப்பட்டது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களின் நிதிப்பங்களிப்போது அமைக்கப்பட்ட குறித்த நுழைவாயில் கோபுரத்தினை நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் திறந்து வைத்திருந்தனர்.