கொரோனா விழிப்புணர்வுக்காக பேயாக மாறிய இருவர்!

பேய்களைப் போல் இருவர் உடையணிந்து இந்தோனேசியா கிராமம் ஒன்றில் கொரோனா விழிப்புணர்வு செய்கின்றனர்.

கொரோனா வைரஸ் எனும் அரக்கன் உலகம் முழுவதும் பரவி அனைவரையும் அச்சுறுத்தியுள்ள நிலையில் இந்தோனேசியாவின் கிராமம் ஒன்றில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக இரவு நேரங்களில் தன்னார்வலர்கள் சிலர் பேய் போல உடை அணிந்து பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

இந்தோனேசியாவின் ஜாவா தீவிலேயே தன்னார்வலர்கள் சிலர் இரவு நேரத்தில் இவ்வாறு ரோந்து பணியில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.