காணி ஆக்கிரமிப்பு; மேஜர் ஜெனரல் உட்பட நால்வருக்கு அழைப்பாணை!

காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் மேஜர் ஜெனரல் பிரியங்க பெரேரா, இரண்டு கேணல்கள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஆகியோரை செப்டம்பர் 15ம் திகதி ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு வணிக உயர்நீதிமன்றத்தின் வாடிக்கையாளருக்கு சொந்தமான நுவரெலியா – ஹட்டன், கொட்டகலை வணிகப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நிலத்தையும் ஏராளமான கட்டிடங்களையும் இராணுவம் ஆக்கிரமித்துள்ளமை மற்றும் தனிமைப்படுத்தல் மையமாக மாற்ற முயற்சி மேற்கொண்டு இராணுவத்தை நிறுத்தி இராணுவ முகாமாக மாற்றியதாக தொடரப்பட்ட வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.