ஹெரோயினுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை ஹதா பள்ளிவாயல் வீதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் நேற்று (01) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி விஜயவீர தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் போதை தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பிறைந்துரைச்சேனையை சேர்ந்த 38 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபரிடம் இருந்து 1850 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி விஜயவீர மேலும் தெரிவித்தார்