முள்ளிக்குளத்தில் யானை தாக்கி இளம் தாய் மரணம்!

மன்னார் – மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் காட்டுப் பகுதியில் யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளதுடன் அதில், சசிகுமார் கௌசல்யா (38-வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் சடலம் காட்டுப் பகுதியில் இருந்து இன்று (30) காலை மீட்கப்பட்டுள்ளது.