முச்சக்கரவண்டி தீக்கிரை!

வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரிக்குளம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியின் வீடொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சகரவண்டியை நேற்று (30) இரவு இனந்தெரியாத நபர்கள் இவ்வாறு தீயிட்டு எரித்துவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.