இவருவர் பலியானதால் முல்லை மக்கள் விடுத்த கோரிக்கை!

முல்லைத்தீவு – நெடுங்கேணி பிரதான வீதியிலுள்ள பழமைவாய்ந்த மரங்கள் வீதியின் நடுவே சரிந்து உள்ளமையினால் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

குறிப்பாக கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பழமைவாய்ந்த மரங்கள் வீதியோரமாக முறிந்து விழுந்துள்ளன.

நேற்று முன்தினம் முல்லைத்தீவு – உண்ணாப்பிலவு பகுதியில் வீதியோரத்தில் இருந்த மரம் முறிந்து வீழ்ந்தமையால் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், இவ்வீதியூடாக பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கு குறித்த வீதியிலுள்ள ஆபத்தான மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.