
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர் வேறு மாவட்டத்திலும், நான்கு பிள்ளைகள் வேறு மாவட்டத்திலுமாக பிரிந்து வாழும் சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
பாணந்துறை நல்லுருவ பகுதியை சேர்ந்த தம்பதியினர் கடந்த மாதம் கண்டி கலஹா பகுதியிலுள்ள உறவினர் வீடொன்றில் திருமண நிகழ்விற்காக சென்றிருந்தார்கள். இதன்போது அவர்களின் நான்கு பிள்ளைகளையும் வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றார்கள்.
அவர்கள் கண்டிக்கு சென்ற பின்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர்களால் உடனடியாக சொந்த வீட்டிற்கு திரும்ப முடியவில்லை. தற்போது கலஹா பகுதியிலேயே தங்கியிருக்கிறார்கள்.
19,17,15,4 வயதான பிள்ளைகளே வீட்டில் சிக்கியுள்ளனர். பெற்றோர் இல்லாத நிலையில், உணவு செலவிற்கும் பணமில்லாமமலிருப்பதாக பிள்ளைகள் தெரிவித்துள்ளனர். பெற்றோரை தம்முடன் இணைக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.