கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய விமானத்தில் இரு சடலங்கள் !

விமானத்தில் பயணித்த இரண்டு பயணிகள் உயிரிழந்த நிலையில் இந்தோனிசியா விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிரங்கியுள்ளது.

சவுதி அரேபியாவிலிருந்து 285 பயணிகளுடன் இந்தோனேசியாவை நோக்கி சென்ற லயன் எயார் நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றே இன்று திங்கட்கிழமை அதிகாலை அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இவ் விமானத்திலிருந்து நோய்வாய்ப்பட்டதாக கூறப்பட்ட இரண்டு பயணிகள் உயிரிழந்த நிலையில் சடலமாக இறக்கப்பட்டது.

இவ்விரு சடலங்களும் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com