பிள்ளையான் உட்பட 9 பேர் ஈஸ்டர் பயங்கரவாத விசாரணக்கு அழைப்பு!

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிள்ளையான் உட்பட 9 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி பிள்ளையான் எனும் சந்திரகாந்தன் சுனில் ஹந்துன்நெத்தி, அகில விராஜ் காரியவசம், ஆசு மாரசிங்க, ரஞ்சித் மத்தும பண்டார, மங்கள சமரவீர, திலும் அமுனுகம, கெஹெலிய ரம்புக்வெல, மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோருக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியை நாளை 28ம் திகதியும், ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசத்தை 31ம் திகதியும், ஆசு மரசிங்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரை செப்டம்பர் 2ம் திகதியும், மங்கள சமரவீர மற்றும் பிள்ளையான் எம்பியை செப்டம்பர் 3ம் திகதியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.