சிறைக்குள் போதைப் பொருள் டீல்; அதிகாரிகள் உட்பட நால்வர் கைது!

கம்பஹா – மஹர சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் டீலில் ஈடுபடுவோருடன் தொடர்பை பேணியமை தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சிறைச்சாலை கண்காணிப்பாளர் மற்றும் விமானப்படை வீரர் உள்ளிட்ட நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட போது 15 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சிறைகளுக்குள் போதைப் பொருள் மற்றும் பிற பொருட்களை கொண்டு செல்ல முயற்சிகள் பல இடம்பெற்று வரும் நிலையில் “கண்காணப்புடன் கண்” (watchful eye) என்ற நடவடிக்கையின் கீழ் இந்த கைதுகள் இடம்பெற்று வருகிறது.