நகைக் கடையில் கொள்ளை!

கொழும்பு – இரத்மலானை, பெலெக்கடே சந்தியில் உள்ள தங்க ஆபரணங்களை அடகு வைக்கும் நிலையம் ஒன்றில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிலையத்தில் இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதி கொண்ட தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நுவரெலியா – ஹட்டன் நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வர்த்தக நிலையதில் நுழைந்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தொகை, தொலைபேசி மீள் நிரப்பு அட்டை, சிக்கரட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.