காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் எழுச்சிப் போராட்டங்கள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளான ஆகஸ்ற் 30 அன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பினால் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் நீதி வேண்டியும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் மாபெரும் எழிச்சிப் போராட்டங்கள் நடாத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக அவ்வமைப்பினால் ஊடக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் அனைத்து மக்களையும் அமைப்புக்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டியுள்ளனர்.