அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!

தங்கத்தின் விலையில் திடீரென வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, 22 கரட் தங்கம் ஒரு பவுன் 91 ஆயிரம் ரூபாவிற்கும் 24 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 99 ஆயிரம் ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கடந்த 8 ஆம் திகதி 24 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 109,500 ரூபாவிற்கும் 22 கரட் தங்கம் ஒரு பவுன் 100,500 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.