சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை மஞ்சள் சிக்கியது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 998 கிலோகிராம் மஞ்சள் புத்தளம் – கற்பிட்டி பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையின் புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மஞ்சள் 30 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

கற்பிட்டி – ஏத்துகாலை பகுதியில் லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட போதே மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.