கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா!

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,981 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, இலங்கையில் மேலும் 03 கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு  (24) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,819 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், 150 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.