யாழில் மதுபானம் விற்றவர் அதிரடி கைது!

யாழ்ப்பாணம் – கன்னாதிட்டிப் பகுதியில் வீடொன்றில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடமிருந்து 78 மதுபானப் போத்தல்கள் (கால்போத்தல் அளவுடைய) கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழுள்ள சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போதைத் தடுப்புப் பொலிஸாருடன் இணைந்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.