கனடாவில் கொரோனாவிற்கு நெடுந்தீவு ஈழத் தமிழ்ப் பெண் உயிரிழப்பு !

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்திலும் தற்போது கனடா ரொறன்ரோவிலும் வசித்துவந்த திருமதி புஸ்பராணி நாகராஜா (வயது 56) அவர்கள் ரொறன்ரோவில் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாயாரான இவருக்கும் கணவர் நாகராஜாவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மூச்சுத்திணறலால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் இன்று (13.04.2020) திங்கட்கிழமை உயிரிழந்தார்.

இவருடைய கணவர் தொடர்ந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என உறவினர்கள் எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தனர்.

இவர்களின் பிள்ளைகளுக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டு தற்போது குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com