டிப்பரால் மோதப்பட்ட மற்றொரு பொலிஸ் அதிகாரி பலி!

மாத்தறை – ஹக்மன பொலிஸ் காவலரண் பகுதியில் அண்மையில் பொலிஸார் மீது டிப்பர் வாகனம் மோதிய விபத்து சம்பவத்தில் காயமடைந்து மற்றுமொரு பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார்.

மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த பொலிஸ் அதிகாரி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜூலை மாதம் 13ம் திகதி இரவு மாத்திரை ஹக்மன பொலிஸ் காவலரணில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிலரை டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதி தப்பிச் சென்றிருந்தது.

இதன்போது சம்பவ இடத்திலேயே ஒரு பொலிஸ் அதிகாரி உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.