வாள் வெட்டு தாக்குதலில் இளைஞன் காயம்!

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியில் குழுவொன்று வீதியால் சென்ற இளைஞனை வழிமறித்து வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளது.

கொழும்புத்துறை பகுதியில் இன்றைய தினம் (20) மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நெடுங்குளம் பகுதியை சேர்ந்த கவிசந்திரன் சிவனேஸ்வரன் (வயது-25) எனும் இளைஞனே காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் அவ்வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை பின் தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் இளைஞனை வழி மறித்து வாளினால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

பழைய பகையை தீர்க்கும் முகமாகவே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்று உள்ளது என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.