கொடிகாமத்தில் பேருந்து மோதி குடும்பஸ்தர் படுகாயம்!

தென்மராட்சி – கொடிகாமம் சந்தியில் இன்று (20) இரவு 7.20 மணியளவில் பாதசாரி கடவையில் நடந்து சென்ற குடும்பஸ்தர் ஒருவர் பேருந்து மோதியதில் படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து தங்காலை நோக்கி பயணித்த தனியார் பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது. இதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்தில் கொடிகாமம், நாகநாதன் வீதியை சேர்ந்த கணபதிப்பிள்ளை இரவிச்சந்திரன் (45-வயது) என்ற குடும்பஸ்தரே படுகாயமடைந்தார்.

பேருந்து சாரதி உடனடியாக கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பேருந்தும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பேருந்தில் சென்ற பயணிகள் பிறிதொரு பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.