வாகநேரி விபத்தில் சிறுவன் சாவு!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவு, வாகநேரி பகுயில் இன்று (20) மாலை இடம்பெற்ற விபத்தில் 16 வயது சிறுவன் பலியாகியுள்ளான்.

சுற்றுலா விடுதி வாகநேரியைச் சேர்ந்த நா.ததுஷன் (வயது-16) என்ற சிறுவனே இவ்வாறு பலியாகியுள்ளான்.

குறித்த சிறுவனின் வாகநேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்டதன் பின்னர் தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணத்த போது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டினை மீறி பாதையை விட்டு விலகியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.