ஆயுதங்களை கடத்த உதவிய ஊடகவியலாளர் கைது!

கொழும்பு – ஹோமாகம – பிட்டிபன பகுதியில் மீட்கப்பட்ட பாதாள குழுக்களின் ரி-56 ரக துப்பாக்கிகளை கொண்டு செல்லவதற்கும், அந்த துப்பாக்கிகளை பல்வேறு திட்டமிடப்பட்ட குற்றங்களை புரியும் குழுக்களுக்கு வழங்குவதற்கு உதவி வழங்கியமை தொடர்பில் அச்சு ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதுடைய குறித்த சந்தேகநபர் நேற்று முன்தினம் (17) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் கொரோனா வைரஸ் பரவல் காலப்பகுதியில் சிற்றூர்தி ஒன்றில் ஊடகம் என பதாகை ஒன்றை காட்சிப்படுத்தி தமது ஊடகவியாலாளர் அடையாள அட்டையை முறைக்கேடாக பயன்படுத்தி இவ்வாறு துப்பாக்கிகளை கொண்டு செல்ல உதவி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.