மின்சார சபை கட்டமைப்பு மையத்துக்கு அதிரடி படை பாதுகாப்பு கோரிய மின்சக்தி அமைச்சர்

இலங்கை மின்சார சபையின் கட்டமைப்பு கட்டுப்பாட்டு மையத்துக்கு அதிரடிப்படை பாதுகாப்பு வழங்குமாறு மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கோரியுள்ளார்.

தற்போது அங்கு பாதுகாப்பில் உள்ள அதிகாரிகளுக்கு மேலதிகமாக அதிரடிப் பாதுகாப்பை வழங்குமாறு அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பான கோரிக்கை அமைச்சரால் பாதுகாப்பு செயலாளரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.