
உறங்கிக் கொண்டிருந்த பெண் தாதிய உத்தியோகத்தரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்து சென்றவரை பொலிஸார் தே டி வருகின்றனர். இந்த விடயத்தை கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் தாதிய உத்தியோகத்தர் தங்கியுள்ள பகுதிக்கு சென்ற அடையாம் தெரியாத நபரால் தங்கசங்கிலி அறுத்து செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் பதிவு செயற்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கல்முனை குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று பொலிஸ் மோ ப்பநாயின் உதவியுடன் வைத்தியசாலை சூழலில் தொடர் தேடுதலை மேற்கொண்டனர்.
அத்துடன் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவின் உதவியுடன் ச ந்தேக ந பரை அடையாளம் கண்ட பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் 29 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை கைது செய்திருந்தனர்.
பின்னர் கைது செய்து அழைத்து சென்ற நபரை அளடையாளப்படுத்த முற்படுத்திய போது சந்தேக நபரது முகச்சாயல் மேற்குறித்த சிசிடிவி காணோளி மற்றும் பாதிக்கப்பட்ட தாதிய உத்தியோகத்தரது முறைப்பாட்டுடன் பொருந்தவில்லை என தெரியவருகிறது.
இதனால் கைதான சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதான நபர் சற்று சித்த சுவாதீனமற்றவராக காணப்படுபவர் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தொடர்ச்சியாக கல்முனை குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபர் விட்டுச்சென்ற தடய சான்று பொருட்களை முன்வைத்து தொடர் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.