ஊரடங்கு விதிகளை மீறிய வெளிநாட்டு சுற்றுலாவாசிகளுக்கு நூதன தண்டனை

டேராடூன்,நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.  இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.  இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை நேற்று வரை 273 ஆக உயர்ந்து இருந்தது.உத்தரகாண்டின் ரிஷிகேஷ் நகரில் கங்கை ஆற்றின் கரையோர பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த 10 பேர் சுற்றி திரிந்துள்ளனர்.  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வெளியே சுற்றியது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து, விதிகளை மீறிய அவர்கள் 10 பேரையும் பிடித்து விசாரித்த போலீசார், அவர்களுக்கு நூதன தண்டனை வழங்கினர்.  இதன்படி, அவர்கள் அனைவரும், ‘ஊரடங்கு விதிகளை நான் பின்பற்றவில்லை.  இதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்’ என 500 முறை எழுதி தந்துள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com