யாழ், கிளிநொச்சி மதுபானசாலைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பல மதுபானசாலைகளுக்கு நேற்று முன்தினம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளை தொடர்ந்து கொழும்பிலிருந்து வருகைதந்த மதுவரித் திணைக்களத்தின் விசேட குழுவினர் மதுபான சாலைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதனை தடுக்கும் வகையில் அரசினால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற அதேவேளை மறு அறிவித்தல் வரை அனைத்து மதுபானசாலைகளும் பூட்டப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் யாழ் மற்றும் கிளிநொச்சியில் பல மதுபானசாலைகள் அரசாங்கத்தின் அறிவித்தலை மீறி சட்டவிரோதமாக விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

இது தொடர்பில் பொது மக்களிடமிருந்து முறைப்பாடாக கிடைக்கப்பெற்றதனை தொடர்ந்து கொழும்பிலிருந்து வருகைதந்த விசேட குழுவினர் கிளிநொச்சி ஏ9 வீதியில் உள்ள ஸ்ரார் ரெஸ்ட் உட்பட யாழ்ப்பாணத்தின் உள்ள பல மதுபானசாலைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com