மீன்பிடிக்க சிறுவனை அழைத்து சென்று தாக்கிய ஐவர் கைது!

மாத்தறை – மிரிஸ்ஸவில் மீன் பிடிப்பதற்காக 16 வயது சிறுவனை அழைத்துச் சென்று கொடூரமான முறையில் சித்திரவதை செய்து காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மீன்பிடிப் படகின் உரிமையாளர் மற்றும் ஏனைய நாலர்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தி மற்றும் பெற்றோரின் முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் 4 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஐவரையும் ஆகஸ்ட் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க இன்று (16) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.