அங்கொட லொக்கா அபகரித்த 928 பேர்ச்சஸ் காணி – பொலிஸார் கண்டறிந்தனர்

இந்தியாவில் இறந்துவிட்டதாக நம்பப்படும் பாதாள உலக குழு தலைவன் அங்கொட லொக்காவின் குழுவினருக்கு சொந்தமாக மேல் மாகாணத்துக்குள் மட்டும் 928 பேர்ச்சஸ் காணிகள் இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவை பலாத்காரமாகவும், போலி உறுதிகள் ஊடாகவும் அக்குழுவால் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸாரால் நம்பப்படுகிறது.

அங்கொட லொக்கா சட்டவிரோத செயற்பாடுகள் ஊடாக சுமார் 50 இலட்சம் ரூபாய் வரை பணம், சொத்துக்களைச் சேர்த்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அது தொடர்பில் கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தெரிவித்துள்ளார்.